
"உங்களை எல்லாம் திருத்தவே முடியாது, உங்க பணவெறியால என் வாழ்க்கைய வீணாக்கிட்டிங்க இப்ப சந்தோஷமா? " என்று ராஜதுரையிடம் கர்ஜித்துவிட்டு விருட்டென தன் அறைக்குள் சென்றுவிட்டான் வினோத்.
"நான் என்னமோ கல்யாணத்தை நிறுத்தினமாதிரி கத்திட்டு போறான் இவன்; அந்த பொண்ணுதான இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு போச்சு.." என்று எந்த தவறுமே செய்யாதவர்போல் பேசினார் ராஜதுரை.
"அந்த பொண்ணு ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுது? நீங்க வரதட்சனை ஒரு பைசாகூட வேண்டாம்னு சொல்லுங்க, அந்த பொண்ணுகிட்ட நான் பேசி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறேன்" என்று இரு குடும்பத்திற்கும் இடையே பாலம் கட்டும் முயற்சியில் இறங்கினான் வினோத்தின் அக்கா கணவன் திவாகர்.
"அதெப்படி மாப்பிள்ளை வருகிற மகாலட்சுமியை(வரதட்சனை) வேண்டாம்னு சொல்லுறது? வேணும்னா அந்த ஐந்து லட்சம் பணத்தை அவுங்க சொன்ன மாதிரி ஒரு வாரம் கழிச்சு தரட்டும் பிரச்சனை இல்லை" என்று விட்டுக்கொடுத்து போகும் மாமனிதர்போல் பேசினார் ராஜதுரை.
"செ... இந்த மனுஷன் புத்தி மாறவே மாறாது.." என்று கூறிவிட்டு தன் கணவனை எண்ணி நொந்தவாறே அவ்விடத்தை விட்டு நீங்கினார் ரேனுகா.
"நாங்க எல்லாம் இவ்வளவு சொல்லியும் உங்க மனசு மாறலைனா இதுக்கு மேல ஒன்னும் பண்ண முடியாது.
சரி இந்த விஷயமெல்லாம் எனக்கு எதுக்கு? என் விஷயத்துக்கு வருவோம்; ஏழு வருஷத்துக்கு முன்னாடி உங்க பொண்ணுக்கு நீங்க முப்பது பவுண் நகை போட்டதாதான் எனக்கு நியாபகம். நீங்க மட்டும் உங்க பையனுக்கு இவ்வளவு வரதட்சனை கேட்கறிங்க, அப்ப நான் மட்டும் என்ன இளிச்சவாயா? என் பொண்டாட்டிக்கு இன்னும் ஒரு 40 சவரண் போட்டு என் வீட்டில் கொண்டுவந்துவிடுங்க, இல்லாட்டி நீங்களே வச்சுக்கங்க" என்று ராஜதுரையின் தலையில் மின்னாது இடியை இறக்கிவிட்டுச் சென்றான் திவாகர்.
அந்த மண்டபத்தில் அன்றிறவு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.
கணேசனை பேசவேண்டும் என்று தனியே அழைத்த வினோத் "மாமா நாளை காலை குறிச்ச முகூர்த்தத்துல எங்க அப்பா ஒத்துகிட்டாலும் ஒத்துகாட்டியும் ஸ்வேத்தா கழுத்துல நான் தாலி கட்றேன். எனக்கு யார் சம்மதமும் வேண்டாம், ஸ்வேத்தாவோட சம்மதத்த மட்டும் கேட்டுச் சொல்லுங்க" என்றான்.
"அவள சமாதானப்படுத்ததான் நாங்க எல்லாம் முயற்சி பண்ணிட்டு இருக்கோம் மாப்பிள்ளை...ஆனா அவ பிடிவாதமா இருக்கா. முதல்ல நீங்க உங்க அப்பாவ சம்மதிக்க வையுங்க, பெரியவங்க சம்மதம் முக்கியம். ஸ்வேத்தாவ நாங்க பாத்துக்கிறோம்...அவ கொஞ்சம் பிடிவாதக்காரிதான் ஆனா புத்திசாலி பொண்ணு...எடுத்து சொன்னா உங்கள அவ புரிஞ்சிக்குவா" என்று கூறிவிட்டு தன் அருமை மகளின் திருமணத்தில் நடக்கின்ற தடங்களை எண்ணி நெஞ்சு நிறைய வருத்தத்துடன் சென்றார் அத்தந்தை.
-------------------------------------------------------------------------
அனைவரும் கொடுத்துச்சென்ற தனிமையில் அமர்ந்து யோசித்த ராஜதுரை ஒரு முடிவுக்கு வந்தவராய் தன் மருமகன் திவாகரனை தேடிச்சென்றார்.
"மாப்பிள்ளை என்னை மண்ணித்துவிடுங்கள். பெண்வீட்டாரின் நிலையில் நீங்க என்னை நிறுத்தின பிறகுதான் எனக்கு அவர்களுடைய வலி வருத்தம் என்னன்னு புரிகிறது. வரதட்சனை வாங்குவது தவறுனு நான் உணர்ந்துவிட்டேன். என் வீட்டிற்கு மகாலட்சுமிபோல ஒரு மருமகள் வந்தா அது போது எனக்கு, பணங்காசு கொண்டுவர வேண்டாம், நல்ல குணத்தை கொண்டு வந்தா போதும்" என்று மனம் திருந்தியவராய் ராஜதுரை மண்ணிப்பு கோர,
"என்னிடம் ஏன் மண்ணிப்பு கேட்கறிங்க..பொண்ணுடைய அப்பாகிட்ட மண்ணிப்பு கேளுங்க மாமா.அதுக்குள்ள நான் முறுக்கிகிட்டு போன உங்க மகன்கிட்ட விஷயத்த சொல்லி அவனை சமாதானம் சொய்றேன்" என்றான் திவாகரன்.
"செய்யுங்க மாப்பிள்ளை; அவனிடமும் நான் மண்ணிப்பு கேட்டதா சொல்லுங்க" என்று கூறிவிட்டு கணேசனை பார்க்க சென்றார் அவர்.
-----------------------------------------------------------
"இல்ல மாமா, எங்க அப்பா எவ்வளவுதான் மண்ணிப்பு கேட்டாலும் அவரை என்னால் மண்ணிக்க முடியாது. நான் இனிமேல் அவரிடம் பேசபோறதும் இல்லை,நாளை திருமணத்தின் போதும் அவருக்கு நான் பாதபூஜை பண்ணமாட்டேன்" என்று திவாகரனிடம் கூறினான் வினோத்.
"அப்படி சொல்லாத வினோத். அவுங்க அந்த காலத்து மனுஷங்க, பழசுலையே ஊரிப்போனவங்க; அவுங்கள பொருத்த வரைக்கும் வரதட்சனை எல்லாம் பெரிய தப்பே இல்லை. ஆனா இந்த காலத்து இளைஞர்களான நாம்தான் இவர்களுக்கு புரிகிறமாதிரி எடுத்து சொல்லி திருத்தனும். அதைவிட்டுட்டு அவர்களை ஒதுக்கக் கூடாது. இப்பதான் உங்க அப்பா அவர் தவறை உணர்ந்துவிட்டாரே பிறகென்ன? இப்ப அவரை மண்ணிப்பதுதான் நியாயம்." என்று கூறிய திவாகரனின் அறிவுரையை ஏற்ற வினோத்,
" நீங்க சொல்வதுதான் சரினு எனக்கும் படுது மாமா.."என்றான்.
"அப்புறம் என்னப்பா? போ...போய் உன் ஆளை முதல்ல சமாதானப்படுத்து"என்று ஒரு நமுட்டு சிரிப்போடு கூறினான் திவாகர்.
சந்தோஷ புன்னகையோடு அவ்விடம் நீங்கி தன் தேவதையிடம் சென்றான் வினோத்.
--------------------------------------------------------
"ஸ்வேத்தா, வினோத்த புரிஞ்சிக்க முயற்சிபண்ணாம இப்படி பிடிவாதம் பிடிக்கிறது நல்லதுக்கில்லை; சரி இதுக்கு பதில் சொல்லு, வினோத் அப்பா இப்படி வரதட்சனை கேட்டதால்தான் இவ்வளவு நகை, கார் எல்லாம் உங்க அப்பா செய்கிறார்னு உனக்கு முன்னாடியே தெரியுமா?" என்றாள் ஸ்வேத்தாவின் தோழி மீனா.
"தெரியாது; எதுக்குப்பா இவ்வளவு செய்யறிங்கனு நான் கேட்டப்ப, என் ஒரே மகளுக்கு என் ஆசை தீர செய்து அழகுபார்கிறேன்னு சொல்லி என் வாயை அடச்சிட்டாரு என் அப்பா" என்று ஸ்வேத்தா கூற,
"உனக்கு எப்படி தெரியாதோ அதேபோல வினோத்துக்கும் தெரியாம இருந்திருக்கலாம் இல்லையா?" என்று வினவினாள் மீனா
".........."
"நல்லா யோசிடி, வினோத் நல்லவர்னு எனக்கு தோனுது. இப்ப அவர் அப்பாவும் தன் தவறை உணரந்துவிட்டார். பிறகு கல்யாணத்துக்கு சம்மதிக்க உனக்கு என்ன?" என்று மீனா கூற அதே நேரம் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
"ஸ்வேத்தா, உன்கிட்ட கொஞ்சம் பேசனும்" என்றான் வினோத்.
இங்கிதம் தெரிந்து மீனா விலக வினோத் பேச ஆரம்பித்தான்.
"ஸ்வேத்தா, first of all Iam sorry, எங்க அப்பா பண்ணினது எதுவும் எனக்கு தெரியாது, believe me" என்றான்
"........."
"ஸ்வேத்தா please, try to understand me; உன்ன மனப்பூர்வமா நான் நேசிக்கிறேன். எனக்கு பணம் காசு முக்கியமில்லை. கட்டின புடவையோடு நீ வந்தா போதும், உன்ன வச்சு காப்பாத்த என்னால முடியும். Tell me swetha, will you marry me? " என்று தன் கையை அவள் எதிரே நீட்டினான்.
"உம்...... " என்று வெட்க்கப் புன்னகையோடு தன் செங்கார்ந்தல் விரல்களை அவனது விரிந்த கைமீது வைக்க, அவனோ தன் சட்டை பையிலிருந்து அவர்கள் நிச்சிய மோதிரத்தை எடுத்து அவள் விரலில் அணிவித்தான்.
"உன் புன்னகை செல்வத்தை
என் மன வங்கியில் சேமித்து
நல்லதோர் இல்லறம்
வாங்கிடுவேன் கண்ணே"
என்று மௌனக் கவிதை வாசித்தது அவன் உள்ளம்
நாணத்தோடு தன் கையை அவன் பிடியிலிருந்து விலக்கிக்கொண்டு " சாரி, உங்களை தவறா நினைச்சுட்டேன்" என்றாள் ஸ்வேத்தா.
"Thats ok...ஆனாலும் பயமாதான் இருக்கு"
"எதுக்கு? "
"இப்படி ஒரு கோபக்கார புறட்சிப் பெண்ணோடு வாழ்க்கை பூரா நான் எப்படி குப்பக்கொட்டப் போறேனோனுதான்........"என்று வருத்தம் மிக்க குரலில் வினோத் கூறியதை கேட்டு அவள் பொய் கோபத்தோடு முறைக்க...,
அவனோ உல்லாசமாக சிரித்தான்.
----------------------------முற்றும்------------------------